×

138வது பிறந்தநாள் பாரதியார் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

சென்னை: பாரதியார் பிறந்த தினமான டிசம்பர் 11ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 138வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர் நடராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவர் வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர், கூடுதல் இயக்குநர்கள் ரவீந்திரன் (மக்கள் தொடர்பு), சாந்தி (செய்தி), இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Birthday Party ,Ministers , Ministers pay homage , 138th Birthday Party
× RELATED முக்கூடல், கடையத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா