சாலையில் கிடந்த 10 ஆயிரத்தை காவல் நிலையத்தில் மாணவன் ஒப்படைப்பு

சென்னை: சாலையில் கிடந்த 10 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவனை போலீசார் வெகுவாக பாராட்டினர். சென்னை குமரன் நகர், கவரை தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (12).  அதே பகுதி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை விக்னேஷ் பள்ளிக்கு செல்லும்போது வீட்டின் அருகே உள்ள சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பேப்பர் கவர் ஒன்று கிடந்தது. அதை விக்னேஷ் எடுத்து பார்த்தபோது 10 ஆயிரம் பணம் இருந்தது.

உடனே மாணவன் அருகில் இருந்து குமரன் நகர் காவல் நிலையத்திற்கு சென்று 10 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தான். மேலும் போலீசாரிடம் பணத்தை தவறவிட்ட நபரை கண்டுபிடித்து ஒப்படைக்கும் படியும் கேட்டுக்கொண்டார். சிறு வயதில் மாணவனின் நேர்மையை போலீசார் பாராட்டி இனிப்பு வழங்கினர். மேலும், பணத்தை தவறவிட்ட நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : police station ,road , Student handing over, 10 thousand, police station lying on the road
× RELATED திருத்தணியில் காவல் நிலைய செயல்பாடுகளை கேட்டறிந்த மாணவர்கள்