10 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தியது புதுச்சேரி

பாட்னாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை பிளேட் பிரிவு லீக் ஆட்டத்தில் பீகார் - புதுச்சேரி அணிகள் மோதின. பீகார் முதல் இன்னிங்சில் 173 ரன்னுக்கு சுருண்டது (68.3 ஓவர்). அடுத்து களமிறங்கிய புதுச்சேரி முதல் இன்னிங்சில் 300 ரன் குவித்து ஆட்டமிழந்தது (79.3 ஓவர்).   127 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பீகார் 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்திருந்தது. நேற்று அந்த அணி  196 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (71.4 ஓவர்). சிறப்பாக விளையாடிய ரஞ்சன் ராஜன் ஆட்டமிழக்காமல் 85 ரன் எடுத்தார். இதைத் தொடர்ந்து 70 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புதுச்சேரி அணி 11.2 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி வெற்றியை வசப்படுத்தியது. தொடக்க வீரர்கள்  அருண் கார்த்திக் 28 ரன், டோக்ரா 42 ரன்  விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


Tags : Bihar ,Puducherry , Puducherry defeated Bihar, 10 wickets
× RELATED கூட்டணியில் பிளவு என்பது வதந்தி...