×

காசா கிராண்ட் பிரைட் கிட்ஸ் பள்ளி: மேலாண் இயக்குநர் அருண் தகவல்

சென்னை: குழந்தைகளுக்கு ப்ரீ-ஸ்கூல் முறை சிறந்த அடித்தளத்தை உருவாக்கும் என காசா கிராண்ட் கல்வி நிறுவன் மேலாண் இயக்குநர் அருண் தெரிவித்தார்.  காசாகிராண்ட் குழுமம், காசா கிராண்ட் பிரைட் கிட்ஸ் என்ற பெயரில் கல்விதுறையில் தற்போது தடம் பதிக்கிறது. இந்த கல்வி மையம் சென்னை திருவான்மியூர் பேவாட்ச் பவ்லிவார்டில் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உளவியல் சார்ந்த வளர்ச்சிக்கு இந்த கல்வி மையம் உதவியாக உள்ளது. உலகளாவிய கல்வித் திட்டத்தை பின்பற்றி இங்குள்ள  ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றனர். மூன்று மாதம் பயிற்றுவிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது நிறைய குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் சிறப்பு விழா நடந்தது. அதில் காசா கிராண்ட் பிரைட் கிட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் தோர்த்தி தாமஸ் வாழ்த்திப் பேசுகையில், ‘‘சீக்கிரம் முடிப்பதே சிறப்பு என்பது எங்கள் குறிக்கோள். அது குழந்தைகளுக்கு வேண்டிய விரைவான தொடக்க கல்விக்கு முற்றிலும் பொருந்தும்’’ என்றார்.

காசாகிராண்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் அருண் பேசுகையில், ‘‘காசா கிராண்ட் பிரைட்கிட்ஸ் மூலம் பங்கேற்பு கற்றல் என்னும்  வழிமுறையை வடிவமைத்து பின்பற்றி வருகிறோம். கேளிக்கை மற்றும் விளையாட்டு மூலம் சிறப்பான கல்வியை உருவாக்கித் தருகிறோம். இது பள்ளியிலும், வாழ்விலும் வெற்றி பெறுவதற்கான பலமான அடித்தளத்தை உருவாக்கித் தரும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை ப்ரீ-ஸ்கூலில் ஏன் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எண்ணையும் எழுத்தையும் வீட்டில் பெற்றோரே கற்றுக் கொடுத்துவிடலாமே என்று சிலர் எண்ணுகின்றனர்.  ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில் 1 முதல் 5 வயது வரையிலான காலத்தில் மனத் தூண்டல் அதிகம் இருக்கும் என்பதால் கற்றலில் குழந்தைகள் துடிப்பாகவும் சுட்டியாகவும் முன்னேற்றம் காண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மழலையர் கல்வி மிகச்சிறந்த முதலீடு என்பதற்கு இதுவே சான்று. எனவே ப்ரீ-ஸ்கூல் என்பது குழந்தையின் அடித்தளத்துக்கு முக்கிய தருணம் என்பதால் பெற்றோர் ப்ரீ-ஸ்கூலில் சேர்ப்பதே விவேகமானது’’ என்றார்.

Tags : Arun Info ,Casa Grand Bright Kids School , Bright Kids School Casa Grande, Managing Director Arun
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...