×

தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி: வைகோ குற்றச்சாட்டு

சென்னை: தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தொகுதி-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. துணை ஆட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பொறுப்புக்காக நடைபெறுகிற இந்த தேர்விற்கான நேர்காணல், வருகிற டிசம்பர் 23ம் நாள் முதல் நடக்கிறது.
இதில் கலந்துகொள்பவர்களுடைய மதிப்பு எண்களை, பேனாவால் எழுதக்கூடாது, கண்டிப்பாக பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகிறேன். மதிப்பு எண்களை திருத்தி, தங்களுக்கு வேண்டியவர்களை தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்த 21ம் நூற்றாண்டில், கணினிகளின் காலத்தில், வெளிப்படையாக ஒரு மோசடி நடைபெற இருக்கிறது. அதையும், தமிழக அரசே நடத்தப் போகிறது என்பது மிகவும் வேதனைக்கு உரியது. கிராமப்புறங்களைச் சேர்ந்த, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற இந்தக் கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மதிப்பு எண்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அனைத்து நேர்காணல்களையும், காணொளிப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vaiko ,government employees ,Government , Tamilnadu government employees selection, fraud, vaiko
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...