×

அடுத்து வரும் 10 ஆண்டுகளில் பக்தர்களின் எண்ணிக்கைக்கேற்ப 4 ஆயிரம் கோயில்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர ‘மாஸ்டர் பிளான்’

* அறநிலையத்துறை கமிஷனர் செயல் அலுவலர்களுக்கு உத்தரவு

சென்னை: பக்தர்களின் வருகையை கவனத்தில் கொண்டு 4 ஆயிரம் கோயில்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிக்க அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்து வரும் 10 ஆண்டுகளில், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கோயிலில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள புதிதாக மாஸ்டர் பிளான் ஒன்றை உருவாக்க அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு கோயில்களுக்கும் தனித்தனியாக மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் அந்தந்த கோயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, கோயில்களில் பக்தர்கள் வருகையை கவனத்தில் ெகாண்டு வாகன நிறுத்தம், கழிவறை, குடிநீர், பொருட்கள் பாதுகாப்பு அறைகள், தங்கும் அறைகள், துயில் கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, நில சேகரிப்பு பணிகளில் ஈடுபடவும் அந்தெந்த கோயில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் பக்தர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நிலம் சேகரிப்பு பணியில் ஈடுபடவும் அந்த கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. இதே போன்று அனைத்து கோயில்களில் அடிப்படை வசதிகள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கான நில சேகரிப்பு பணிகளிலும் அந்தெந்த கோயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை செய்து தர முடியும் என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Tags : pilgrims ,temples ,facilities , Commissioner of the Endowment, temples
× RELATED திருச்சியில் 2 கோயில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு