கொலுசு அடகு வைத்து மது குடித்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற மனைவி: விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெள்ளிகொலுசை திருடி  அடமானம் வைத்து மதுகுடித்த கணவனை பாசக்கார மனைவி பெட்ரோ ஊற்றி தீவைத்து  கொல்லமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்  மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(35). கொத்தனார் வேலை  செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா(32). வெற்றிவேல்(12), ஹரீஷ்(10) என  இரண்டு மகன்கள், ஊராட்சி  ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்து வருகிறார்கள். செந்தில் சரிவர வேலைக்குச் செல்லாமல்  குடித்துவிட்டு தினமும் வீட்டிற்கு வருவாராம். இதை சித்ரா கண்டித்ததால் கணவன, மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.  இந்நிலையில்  நேற்று முன்தினம் சித்ரா கூலிவேலைக்கு சென்றுள்ளார். அவர் வீட்டில் வைத்திருந்த வெள்ளி கொலுசை அடகுக்கடையில்  ரூ.1,500க்கு செந்தில் அடமானம் வைத்து  குடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.

Advertising
Advertising

கொலுசை அடகுவைத்து மது அருந்திவிட்டு வந்தது தெரியவரவே ஆத்திரமடைந்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில்,  வீட்டுவாசலில் நின்றிருந்த பைக்கில் இருந்து பெட்ரோலை பிடித்து வந்து  போதையில் படுத்துக்கிடந்த செந்தில்மீது ஊற்றி தீவைத்துள்ளார். தலை, மற்றும்  வயிற்றுப்பகுதி முழுவதுமாக எரிந்து அவர் அலறினார். யாரும் உதவிக்கு வரவில்லை. பின்னர் சித்ராவே 108 ஆம்புலன்சுக்கு போன்செய்து, அவரை மீட்டு  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ேசர்த்தார்.  இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார்,  சித்ராவிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories: