×

சவுதி அரேபியாவுக்கு மருந்து ஏற்றுமதியை அதிகரிக்க ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு மருந்து பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும்  ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி சவுதி அரேபியா ெசன்றார். அப்போது, மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்புக்கும், சவுதி உணவு மற்றும் மருந்து நிறுவனத்துக்கும் இடையே மருந்து உற்பத்தி துறையில் ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு மருந்து பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கப்படும்.

இதர துறைகளில் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டவையின் விவரம்:  
* உருக்கு துறையில் இந்தியா-ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்ததல்
* இந்தியா - பிரேசில் இடையேயான சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அனுமதி.
* காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் தோட்டக்கலை துறைக்கு திருத்தி அமைக்கப்பட்ட பிரதமர் மேம்பாட்டு திட்டத்தை மேலும் 3 ஆண்டுக்கு விரிவுபடுத்துதல்.   
* பாதுகாப்பான விமான பயணத்தை உறுதி செய்யும் விமான திருத்த மசோதாவுக்கு ஒப்புதல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Saudi Arabia ,Cabinet , Agreement , increase , drug exports , Saudi Arabia
× RELATED வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச...