சிகிச்சைக்கு வந்த 25 பெண்களிடம் சில்மிஷம் செய்த இந்திய டாக்டர்: உறுதியானது தண்டனை

லண்டன்: தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 25 பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த இந்திய வம்சாவளி டாக்டரை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அவருக்கு தண்டனை உறுதியாகி உள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டன் ரோம்போர்ட் பகுதியில் வசித்து வருபவர் மணீஷ் ஷா(50). இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவரிடம் சிகிச்சை பெற்ற பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2009 முதல் 2013ம் ஆண்டு வரையில் சுமார் 25 பெண்களிடம் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.

தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் வேண்டுமென்றே, பிறப்பு உறுப்பு பரிசோதனை, மார்பக பரிசோதனை போன்றவற்றை செய்யச் சொல்லி பரிந்துரைத்து, அப்போது அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த வழக்கு ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் மணீஷ் ஷா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>