ஆண்களுக்கும் கூட இந்த காலத்தில் பாதுகாப்பு இல்லேப்பா...22 வயது வாலிபரை கடத்தி பாலியல் ரீதியாக சித்ரவதை: மைனர் உட்பட 4 பேர் கைது

குர்லா: இருபத்தி இரண்டு வயது வாலிபரை கடத்திச் சென்று இயற்கைக்கு மாறான உறவு கொள்ள வைத்து பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஒரு மைனர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் குர்லாவை சேர்ந்த 22 வயது வாலிபர் தன்னை செல்பி எடுத்து அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 8ம் தேதியன்றும் அந்த வாலிபர் தன்னை செல்பி எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததுடன் தான் இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் அவரது போட்டோவை பார்த்த 3 பேர், அந்த வாலிபர் இருந்த ரெஸ்டாரண்டுக்கே நேரில் சென்று அவரை சந்தித்து பேசினார். போட்டோவில் மிக அழகாக இருப்பதாக அந்த வாலிபரை புகழ்ந்து பேசிய அவ்விருவரும் நட்பாக பழகினர். பின்னர் வெளியில் எங்காவது சென்று வரலாம் எனக் கூறி தங்கள் காரில் ஏற்றினர். கார் மும்பை விமான நிலையம் நோக்கி சென்றது. 20 நிமிட பயணத்துக்கு பிறகு ஒரு ஓட்டல் அருகில் கார் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு ஏற்கனவே தயாராக நின்றிருந்த மற்றொரு காரில் அந்த வாலிபரை மூவரும் ஏற்றினர். அந்த காரில் ஏற்கனவே ஒரு மைனர் இருந்தார்.

Advertising
Advertising

நான்கு பேரும் சேர்ந்து ஓடும் காரில் அந்த வாலிபரை இயற்கைக்கு மாறான உறவில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர். இந்த உறவுக்கு மறுத்த போதெல்லாம் வாலிபர் கடுமையாக தாக்கப்பட்டார். சுமார் ஒரு மணிநேரம் ஓடும் காரில் இந்த பாலியல் சித்ரவதை நடந்தது. அதன் பிறகு குர்லா அருகில் அந்த வாலிபரை கீழே இறக்கிவிட்டு விட்டு காரில் 4 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அங்கிருந்து வந்த வாலிபர் குர்லாவில் உள்ள வினோபா பாவே நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வாலிபரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் பாலியல் சித்ரவதைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட வாலிபர் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் மெகுல் பார்மர்(21), ஆசிப் அலி அன்சாரி(23), பியூஷ் சவான்(22) மற்றும் ஒரு மைனர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் காட்கோபரைச் சேர்ந்தவர்கள். நான்கு பேருக்கும் எதிராக இ.பி.கோ. 377(இயற்கைக்கு  மாறான பாலியல் உறவு), 392(திருட்டு) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர். குற்றவாளிகளில் ஒருவரான மைனர் சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: