வேலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் டிஜிட்டல் எல்இடி அறிவிப்பு பலகை பழுது

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட 20க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்களை அளிக்க வந்து செல்கின்றனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் எல்இடி அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டது. அதில் அரசின் புதிய திட்டங்கள்,

அதனை பெறுவதற்கான விண்ணப்பிக்கும் வழிமுறைகள், இயற்கை தொடபான பாதுகாப்பு ஆலோசனைகள், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது. இது பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டிஜிட்டல் எல்இடி அறிவிப்பு பலகை பழுதடைந்து பல ஆண்டுகளான நிலையில் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அரசின் நலத்திடங்கள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த தகவல்கள் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு சார்பில் பொதுமக்கள் வசதிக்கென அமைக்கப்பட்ட பல்வேறு கட்டமைப்புகள் காலப்போக்கில் காட்சிப் பொருளாக மாறிவிடுகிறது.

சீரான பராமரிப்பு மேற்கொள்ளாததால் தற்போது பொதுமக்கள் வசதிக்கென அமைக்கப்பட்ட டிஜிட்டல் எல்இடி அறிவிப்பு பலகை பழுதான நிலையில் உள்ளது. அதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: