ஆதரவாக 125, எதிராக 105 பேர் வாக்களிப்பு: பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மசோதா,  குடியுரிமை திருத்த மசோதா ஆகும். நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது.  மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணியளவில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டியது. இந்நிலையில், மசோதா  தொடர்பாக நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை காரசார விவாதங்கள் நடைபெற்றது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தனர்.  இதன் அடிப்படையில், வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 117 பேரும், எதிராக 92 பேரும் வாக்களித்ததால், மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து, மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தால், மசோதா  வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படும்.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்:

மசோதா தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல லட்சம் மக்களுக்கு இந்த சட்டம் நம்பிக்கை அளிக்கும். நாடற்ற மக்களுக்கு இந்த சட்டம் நம்பிக்கை அளிக்கும். துன்பப்படும் மக்களுக்கு இந்த சட்டம் ஒரு வாய்ப்பு  கொடுக்கும். துன்பப்படும் சிறுபான்மையினருக்கு இதனால் வெளிச்சம் கிடைக்கும். அவர்களுக்கான உரிமை கிடைக்க இதன் மூலம் வழி வகை செய்யப்படும். பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது.  சிறுபான்மையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்திருக்கலாம்.

பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து சிலர் இந்தியா வந்து நிம்மதியாக இருக்கிறார்கள். நாங்கள் இந்த சட்டத்தை வாக்கு வங்கிக்காக செய்யவில்லை. நாங்கள் இந்த சட்டத்தை லோக்சபா தேர்தலுக்கு முன்பே கொண்டு வர முயற்சி செய்தோம்.  எங்களுக்கு வடகிழக்கு மக்களின் நன்மையே முக்கியம். இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இதனால் பயப்பட கூடாது. பாகிஸ்தானில் இருந்து வரும்  இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. ஆப்கானிஸ்தானில், வங்கதேசத்தில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. இந்த சட்டம் அப்படி செயல்படாது, என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் குடியுரிமை மசோதா குறித்து எவ்விதத்திலும் அஞ்சத் தேவையில்லை என்று தெரிவித்தார். இந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து இந்திய குடிமகன்களாகவே நீடிப்பார்கள் என்றும் தெரிவித்தார். இம்மசோதா குறித்து  முஸ்லிகள் மத்தியில் தேவையற்ற அச்ச உணர்வுகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அமித் ஷா குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் மக்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு நம் நாட்டு  குடியுரிமை தருவது எந்த வகையில் சரியாக இருக்கும்? என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார். அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள சிறுபான்மையின மக்களுக்கு நம் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை  உறுதிப்படுத்தவே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.    

பாகிஸ்தான் பிரதமர் கருத்தும், காங்கிரஸ் கருத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன என்றும் குடியுரிமை மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு  நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்றார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை மசோதாவிற்கு தேவை இருந்திருக்காது. வெளிநாட்டு  இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அவர்கள் துன்புறுத்தப்பட வாய்ப்புகள் குறைவு என்றார்.

குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல. இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கடந்த காலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது, தற்போது மற்ற 3 நாடுகளில் இருந்து வரும்  பிரச்சனைகள் தொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 99 பேரும்,  எதிராக 124 பேரும் வாக்களித்ததால், மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து, குடியுரிமை மசோதா வாக்கெடுப்பை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து சிவசேனா கட்சி  உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தற்போது, மசோதாவிற்கு ஆதரவு பார்க்கும் போது, மாநிலங்களவையில் எளிதில் நிறைவேறி விடும் என்று தெரிகிறது.

Related Stories: