பாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

மயிலாடுதுறை: சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளியாக தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழசக்கரநல்லூர் கிராம சுடுகாட்டுக்கு போதிய பாதை வசதி கிடையாது. இதனால் சடலங்களை வயல்வெளியாக கொண்டு சென்று மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், சோழசக்கரநல்லூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அவையாம்பாள்(60)  நேற்றுமுன்தினம் இறந்தார். அவரது உடலை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சுடுகாட்டிற்கான பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக சுமார் 150மீ தூரத்திற்கு நட்ட வயலில் சேற்றில் இறங்கி சென்றனர்.  மழைக்காலத்திலும் விவசாயம் பயிர்செய்துள்ள காலத்திலும் இறந்தவர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல படாதபாடு படுகின்றனர். ‘’சோழசக்கரநல்லூர் மெயின்ரோடு பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தித்தர வேண்டும்’’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: