குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் பெரும் போராட்டம்: வன்முறை வெடித்துள்ளதால் ராணுவ வீரர்கள் குவிப்பு

அசாம்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் நடைபெற்று வரும் போராட்டத்தில், வன்முறை வெடித்துள்ளதால் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவால், வடகிழக்கில் வாழும் பழங்குடியின மக்கள் இடம் பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமென்ற அச்சம் நிலவுகிறது. இதனால், ஆரம்பத்தில் இருந்தே குடியுரிமை திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, இன்று மாநிலங்களவையில் மசோதா மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து, வடகிழக்கில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. அசாம், திரிபுரா மாநிலங்களில் இம்மசோதாவுக்கு எதிராக தொடர் மறியல் போராட்டங்கள், முழு அடைப்பு நடைபெற்று வருகின்றன. குவஹாத்தியில் ஆளுநர் மாளிகை, தலைமை செயலக்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது வாகன போக்குவரத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பல இடங்களில் போலீசாருடன் மோதல் வெடித்தது, போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. திரிபுராவில் வர்த்தக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. பொதுசந்தைகள் சூறையாடப்பட்டன. மேலும் போலீசாருடன் மோதல்கள் ஏற்பட்டன. தற்போது ஜம்மு காஷ்மீரில் இருந்து கூடுதல் துணை ராணுவப்படையினர் அசாம் மற்றும் திரிபுராவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். திரிபுராவில் 2 ராணுவக் குழுக்கள் உள்ள நிலையில், அசாமில் ஒரு ராணுவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: