×

கனடா நாட்டில் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய புதிய கடல் விமானம் அறிமுகம்

கனடா: கனடா நாட்டில் முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய வகையில் புதிய கடல் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முழுமுதல் மின்சார வணிக வாகனப் போக்குவரத்து கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. வான்கூவரை சேர்ந்த ஹார்பர் ஏர் சி பிளேன்ஸ் நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மேக்னி எக்ஸும் கூட்டாக சேர்ந்து அந்த விமானத்தை உருவாக்கியுள்ளனர். கனடாவின் உயரிய மலை சூழ்ந்த வான்கூவர் நகரில் இருந்து, பசிபிக் கடலின் எல்லை வரையில் இயக்கப்பட்ட இந்த மின்சார வணிக விமானத்தை, ‘ஹார்பர் ஏர்’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான கிரீக் மிக்டாகல் என்ற விமானி இயக்கினார்.

மின்சார உதயத்துக்கு பிறகு, 100 பார்வையாளர்கள் மத்தியில் 15 நிமிடங்களுக்கு குறைவாக வெற்றிகரமாக இயக்கப்பட்ட இந்த விமானத்தில், 6 பயணிகளும் பறந்தனர். 6 பேர் பயணிக்கக்கூடிய அந்த விமானம் ரிச் மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு அங்குள்ள கடல் பகுதியில் சீறி பாய்ந்து சென்றது. இதனால் விமானத்தை உருவாக்கிய நிறுவனம் சந்தோஷத்தில் ஆழ்த்தப்பட்டது. பின்பு அந்த விமானம் அனைவராலும் கவரப்பட்டது. இதுகுறித்து தலைமை நிர்வாகி தெரிவித்ததாவது, மின்சார வணிக விமான தொழில்நுட்பம் மூலம், விமான நிறுவனங்களின் செலவு கணிசமாக குறையும். மேலும், இந்த வெற்றிகரமான பயணம் என்பது மின்சார விமான போக்குவரத்து கால தொடக்கத்தின் அறிகுறியாக பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Tags : Canada , Introduction to Canada, Water, Sky, Sea Aircraft,
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு