மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் காரசார விவாதம்!

புதுடெல்லி: மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துகள் பின்வருமாறு..

ஆனந்த் சர்மா

குடியுரிமை மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, எதிர் கட்சிகளின் எதிர்ப்பு அரசியல் ரீதியானது இல்லை, கொள்கை ரீதியானது. இந்திய அரசியலமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது என கூறியுள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு அடிப்படையை இது கேள்வி கேட்கிறது. சட்டத்தை உருவாக்கியவர்களை இது அவமானப்படுத்துகிறது.

இந்த சட்டத்தின் அடிப்படையை நீங்கள் உடைக்க முயல்கிறீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் இதை எதிர்க்க விடும். ஆனால் இதை அரசியலாக்க கூடாது. இதை ஜின்னா கொண்டு வர, இந்து மகாசபா 1937ல் குஜராத்தில் அறிமுகம் செய்தது. இதை பற்றி அமித் ஷா பேச மாட்டார். அகதிகள் முகாம்களுக்கு அமித் ஷா சென்று பார்த்தால்தான் அவருக்கு அகதிகள் முகாமின் வலி தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

டி.கே.ரங்கராஜன்

அண்டை நாடுகளில் இருந்து வந்துள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை தர வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் இலங்கை அகதிகள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா

இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை அளிக்க முன்வரவில்லை என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். 30 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்

மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தற்போது கொண்டுவந்துள்ள மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது. தற்போதைய நிலையில் மசோதா நிறைவேற்றினால் அது நீதிமன்றத்துக்கு செல்லும். இந்துத்துவா கொள்கையை முன் நிறுத்துவதிலேயே மத்திய அரசு தீவிரமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

விஜிலா சத்தியநாதன்

குடியுரிமை திருத்த சட்ட மசோதா மீது பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியநாதன், இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்ல என கூறியுள்ளார். குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும். இலங்கை தமிழர்களையும் குடியுரிமைத் திருத்த மசோதாவில் இணைக்க அவர் வலியுத்தியுள்ளார்.

சஞ்சய் ராவத்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் என சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நடைபெறும் குடியுரிமை சட்ட மசோதா மீது சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேசினார். அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் அதே நேரத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: