ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: ரிசாட்-2பிஆர்1 மற்றும் 9 வணிக ரீதியான செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி புவி கண்காணிப்பு மற்றும் அதிநவீன படங்களை எடுத்து அனுப்பும் ‘கார்டோசாட்-3’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்க  நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான ‘நானோ’ செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது.

Related Stories: