×

பாம்பின் நஞ்சின் மூலமாக விஷமுறிவு மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்!!

பிரேசில். : பிரேசில்...ஏராளமான விஷப் பாம்புகளின் வசிப்பிடம். பிரேசில் வெப்பத்தில் சுமார் 12 வகைக் கொடுமையான விஷம் கொண்ட பாம்புகள் வாழ்கின்றனவாம். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பாம்புகளால் கடிபடுகின்றனர். பலர் மடிகின்றனர்.அமஸான் வட்டாரத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்.ஆனால் அதை ஆக்ககரமாகப் பயன்படுத்த முடிவு செய்தனர் பிரேசில் ஆய்வாளர்கள்.நூற்றுக்கணக்கான பாம்புகளை வைத்து, அவற்றின் நஞ்சை எடுத்து, விஷக் கடிக்கு மருந்து தயாரிக்கின்றனர் இவர்கள்.அவை சுகாதார அமைச்சின் மூலம், பிரேசிலின் பல்வேறு மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

நஞ்சை எடுப்பது எளிதல்ல. மிகவும் ஆபத்தான அந்தச் செயலைக் கவனமாகக் கையாள்கின்றனர் ஆய்வாளர்கள். பத்திரமாகப் பாதுகாக்கப்படும் நஞ்சில் ஒரு சிறு துளி, குதிரை போன்ற விலங்குகளில் செலுத்தப்படுகிறது.அது குதிரையின் ரத்தத்தில் கலந்து எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்துகிறது.பின் அந்தக் குதிரையிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு,விஷக்கடிக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளுக்கு விஷக்கடி மருந்து பிரேசிலிலிருந்து செல்கிறது.உலகில் ஆண்டுதோறும் சுமார் 5.4 மில்லியன் பேர் பாம்புகளால் கடிபடுகின்றனர் என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. அதில் சுமார் 138,000 பேர் மடிகின்றனர்.அந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க பிரேசிலில் விஷக்கடி மருந்து தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

Tags : researchers ,Brazilian , Brazilian researchers poisoning snakes with poison
× RELATED பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் –...