ஹைட் பார்க்

நன்றி குங்குமம் முத்தாரம்

உங்களின் வாழ்க்கையில் ஒரு முறையாவது நடைபயணம் மேற்கொள்ள வேண்டிய இடம் ஹைட் பார்க். லண்டனில் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்தப் பூங்கா 350 ஏக்கர் பரப்பளவில் விரிந்துகிடக்கிறது. இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றியால் 1536-ம் வருடம் அடித்தளமிடப்பட்ட இந்தப் பூங்கா 1637-இல் திறக்கப்பட்டது.

படகு சவாரி, ரோஜா மலர்த்தோட்டம், டென்னிஸ் மைதானம், இசைக்கச்சேரிகள் மற்றும் அரசியல் மாநாடு நடக்கும் இடம் என ஏகப்பட்ட வசதிகளை உள்ளடக்கியிருக்கும் இந்தப் பூங்கா அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு வரை செயல்படுகிறது. ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. லண்டனுக்கு வருகிற சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூங்காவுக்குச் செல்லாமல் சொந்த ஊருக்குத் திரும்புவதில்லை.

Related Stories:

>