இளஞ்சிவப்பு நிற யானை!

நன்றி குங்குமம் முத்தாரம்

கென்யாவின் புகழ்பெற்ற ரிசர்வ் காடு மாசாய் மாரா. மாசாய் இன மக்களை கௌரவிக்கும் விதமாக காட்டுக்கு இந்தப் பெயர். சிங்கம், சிறுத்தை, யானை என ஏராளமான வன உயிர்களின் புகலிடம் இது. காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களின் சொர்ககபுரி. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தாய் யானை குட்டியை ஈன்றெடுத்தது.

இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அந்தக் குட்டியானை இணையத்தில் வைரலானது. ஏன் அப்படியிருக்கிறது? என்று மருத்துவ பரிசோதனை செய்ததில் அதன் ஜீன்களில் குளறுபடியாகியிருப்பது தெரியவந்தது.

அதன் நிறம் யானைக் கூட்டங்களில் இருந்து அதை வேறுபடுத்தி தனிமைப்படுத்தியதால் சிறிது காலம் தனிமையில் தவித்த அந்த யானை. இப்போது தனனைப்போன்ற குட்டிகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்திருக்கிறது

Related Stories: