×

தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

தேனி: தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி பைக்கில் வந்தவர் பலியானார். தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த வேல்முருகன், மனைவி மாரியம்மாள் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சின்னமனூரை நோக்கி பைக்கில் சென்றார். உப்பார்பட்டி விலக்கு பகுதி அருகே சென்றுக்கொண்டிருக்கும் போது, எதிரே டிராக்டரை முந்தி, வலதுபுறமாக வந்த டிப்பர் லாரியால், பைக்கில் வந்த வேல்முருகன் நிலை தடுமாறினார். பதற்றத்தில் திடீர் பிரேக் பிடித்ததால் சாலையில் இடறிய பைக், டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கியது. வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Tags : district ,Theni , Theni, tipper lorry, kills
× RELATED தேனி மாவட்டத்தில் ஏப்.23-ல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்!