புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: சவூதி விமானிகளுக்கு அளிக்கும் பயிற்சியை அதிரடியாக நிறுத்தியது அமெரிக்கா

வாஷிங்டன்: புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து சவூதி அரேபியா விமானிகளுக்கு அளிக்கும் பயிற்சியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியுள்ளது.

புளோரிடா துப்பாக்கிச் சூடு:

அமெரிக்கா கடற்படை தளத்தில் சவூதி அரேபியாவை சேர்ந்த பயிற்சி விமானி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். புளோரிடா மாநிலத்தின் பென்சகோலா நகரிலுள்ள கடற்படை தளத்தில் கடந்த வாரம் இச்சம்பவம் அரங்கேறியது. மேற்படி தளத்தில் சவூதி அரேபியாவை சேர்ந்த முகமது அல் ஷம்ரானி என்பவர் போர் விமானியவதற்கு பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் பயிற்சியக வகுப்பறைக்கு வந்த அல் ஷம்ரானி திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில் அங்கிருந்த 3 பேர் உயிரிழந்தனர். பின்னர் தாக்குதல் நடத்திய அல் ஷம்ரானியை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். தாக்குதலுக்கு முன்னர் அமெரிக்கா தீய சக்திகளின் நாடு என்று அல் ஷம்ரானி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த தாக்குதலுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்தது.

சவூதி விமானிகளுக்கு அளிக்கும் பயிற்சியை நிறுத்தியது அமெரிக்கா:

இந்நிலையில், சவூதி விமானிகளுக்கு அளிக்கும் பயிற்சியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. புளோரிடாவில் உள்ள மூன்று தளங்கள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள தளங்களில் சவூதி விமானிகளுக்கு அளிக்கும் பயிற்சியும் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் பயிற்சி பெரும் 300 சவூதி விமானிகள் பாதிக்கப்படுவர் என்றும், இதன் காரணமாக இரு நாடுகள் இடையேயான உறவு பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: