பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது: அமித்ஷா

டெல்லி: நாங்கள் இந்த சட்டத்தை லோக்சபா தேர்தலுக்கு முன்பே கொண்டு வர முயற்சி செய்தோம். நாங்கள் இந்த சட்டத்தை வாக்கு வங்கிக்காக செய்யவில்லை. பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து சிலர் இந்தியா வந்து நிம்மதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கான உரிமை கிடைக்க இதன் மூலம் வழி வகை செய்யப்படும். துன்பப்படும் சிறுபான்மையினருக்கு இதனால் வெளிச்சம் கிடைக்கும். துன்பப்படும் மக்களுக்கு இந்த சட்டம் ஒரு வாய்ப்பு கொடுக்கும். சிறுபான்மையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்திருக்கலாம். பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது. நாடற்ற மக்களுக்கு இந்த சட்டம் நம்பிக்கை அளிக்கும்.

Advertising
Advertising

Related Stories: