உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துப்பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துப்பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் முதல்முறையாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேட்பு மனுவுடன் சொத்து மற்றும் வழக்கு விவரங்களை தெரிவிக்கும் 3- ஏ என்ற உறுதிமொழி படிவமும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள், தண்டனை விவரங்களை உள்ளிட்டவைகளை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* தனது பெயர்களிலும், குடும்பத்தினர் பெயர்களிலும் இருக்கும் சொத்துக்கள்.

* விவசாய நிலங்கள்.

* இதர சொத்துக்கள்.

* வங்கியில் பெறப்பட்டுள்ள கடன்கள்.

* முதலீடுகள்.

* பண இருப்பு

உள்ளிட்டவைகளை வேட்பாளர்கள் முழுமையாக, கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அடிப்படியில் தேர்தல் நடக்கும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஒன்றிய வார்டுகள் மட்டுமின்றி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரும் சொத்து விவர பட்டியலை நோட்டரி பப்ளிக் உள்ளிட்ட தகுதியானோர் முன்னிலையில் உறுதிமொழி அளிக்கப்பட்ட பத்திரங்களை வேட்புமனுவுடம் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>