சிரியாவில் அமெரிக்க படைகள் வாபஸ்: அவ்விடத்தை நிரப்பும் ரஷ்யா

சிரியா: சிரியாவில் திரும்ப பெறப்பட்ட அமெரிக்க படைகளின் இடத்தை நிரப்பும் வகையில் அவ்விடங்களுக்கு ரஷ்யா தனது படைகளை அனுப்பி உள்ளது. சிரியாவில் வடகிழக்கு பகுதியில் வாபஸ் பெறப்பட்ட அமெரிக்க படைகளுக்கு பதிலாக அவ்விடங்களுக்கு ரஷ்யா தனது படைகளை அனுப்புகிறது. பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்விடங்களில் மனிதாபிமான நடவடிக்கையிலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

Advertising
Advertising

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இது துருக்கி எதிராக பெரும் அதிர்வலையை ஏற்படுத்த துருக்கி தாக்குதலை நிறுத்தியது. இருப்பினும் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

Related Stories: