சேலம் லட்சுமி ஓட்டலுக்கு சொந்தமான 5 இடங்களில் தொடாந்து 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

சேலம்: சேலம் லட்சுமி ஓட்டலுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லட்சுமி ஓட்டல் குழுமத்துக்கு சொந்தமான உணவகங்கள், வீடு என 5 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 3-வது நாள் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாநகர் பகுதிகளில் பிரபலமான லட்சுமி ஓட்டல் குழுமத்திற்கு 5 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து சேலம், திருச்சி, கோவை மாவட்டங்களை சேர்ந்த வருமான வரி துறை அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு கிளைகளிலும் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரி துறை அலுவலங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் 5 இடங்களிலும் உள்ளே நுழைந்து அவர்கள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளே இருந்த கடை ஊழியர்களை வெளியேற்றிவிட்டு கடையின் நுழைவாயிலை மூடிவிட்டு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் வரி ஏயப்பு கோடிக்கணக்கான மதிப்பில் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories:

>