பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகாதீபம்

பெரம்பலூர்: எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது. 1008 மீட்டர் திரி, 3000 கிலோ நெய்யை கொண் டு ஜோதி ஏற்றப்பட்டது. இதில் தரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருநாளில் மலைமேல் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்நாளான நேற்று காலை 6 மணிக்கு கஜ பூஜையும், கோ பூஜையும், 7 மணிக்கு 210 சித்தர்கள் யாகமும், காலை 10.30 மணிக்கு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து யானை மீது தீபம் ஏற்றும் செப்பு கொப்பரையை வைத்து சித்தர் பஞ்சலோக சிலையுடன் சிவ பூதன வாத்தியங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் சிவனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதும் பிரம்மரிஷி மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மலை மேல் மாலை 6 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி மகா தீபம் கொண்டு செல்லப் பட்டது. அன்னை சித்தர்கள் ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் மலையின் மேல் 1,008 மீட்டர் நீளமுள்ள திரி மற்றும் 3 ஆயிரம் கிலோ நெய், 50 கிலோ கற்பூரம் கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத் தலைமை நீதிபதி மலர்விழி, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் சாதுக்களுக்கு வஸ்திர தானம் வழங்கினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, சிதம்பரம் நீீதிமன்ற நீதிபதி கருணாநிதி, பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>