மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்த தினத்தையொட்டி அவரை புகழ்ந்து தமிழில் பதிவிட்டார் பிரதமர் மோடி

டெல்லி: மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை புகழ்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் கருத்து பதிவிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாரதியாரை புகழ்ந்தும், அவரது வரிகளை குறிப்பிட்டும் பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுகிறேன் என்றார். மேலும் தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் என குறிப்பிட்டார்.

அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்னும் நம்மை எழுச்சியூட்டும் விதமாக உள்ளன என கூறினார். மேலும் சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார் என கூறினார் தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று ஒருமுறை சொன்னார் என்று கூறினார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது என கூறினார்.

Tags : Modi ,birthday ,Mahakavi Bharatiya ,Bharatiya Janata Party , Modi,praises,Bharatiya Janata Party's,138th birthday
× RELATED ஜேசுதாசுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து