கவரிங் நகை கொடுத்து மோதிரம் வாங்கிய பெண் கைது

சென்னை:  எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மதன்குமார்(38); அதேபகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரிடம் நேற்று முன்தினம் பெண் ஒருவர் 3 பழைய மோதிரங்கள் கொடுத்துவிட்டு, புதிய மோதிரங்கள் வா்ிச் சென்றார். நேற்று மதியமும் அதே பெண் கடைக்கு வந்தார். அப்போது, பழைய செயினை கொடுத்து, புதிய நகை தருமாறு கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்த மதன்குமார் செயினை ஆய்வு செய்தார். அப்போது, அது கவரிங் நகை என தெரிந்தது.  இதையடுத்து, ஏற்கனவே அந்த பெண் கொடுத்த மோதிரங்களையும் ஆய்வு செய்தபோது அவையும் கவரிங் என தெரியவந்தது. உடனே மதன்குமார் அந்த பெண்ணை பிடித்துவைத்து எம்.ஜி.ஆர் நகர் போலீசுக்கு புகார் செய்தார். போலீசார் வந்து அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் திருச்சியை சேர்ந்த பிரியா (42) என்றும், கே.கே.நகரில் தங்கி கவரிங் நகைகளை இதுபோல் பல இடங்களில் கொடுத்து மோசடி செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: