மணலி, கொடுங்கையூரில் பெண்களிடம் செயின் பறிப்பு: மதுரை ஆசாமி கைது

தண்டையார்பேட்ைட: மணலியை சேர்ந்த சாந்தி (50), நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த ஒரு வாலிபர், சாந்தி கழுத்தில் இருந்து செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.  இந்நிலையில் கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனியை சேர்ந்த ராஜேஷ் (22) என்பவர், சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த வாலிபர், அருகில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றார். இதை தடுக்க முயன்ற ராஜேஷை, அந்த வாலிபர் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.  படுகாயமடைந்த ராஜேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.  அப்போது, ஒரே வாலிபர்தான் இரண்டு இடங்களிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அதில், பதிவான உருவத்தை வைத்து விசாரணை நடத்தியதில், மதுரையை சேர்ந்த ராபர்ட் (20) செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>