போக்சோவில் வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் வசிப்பவர் மலர் (30). திருமணமானவர். அதே பகுதி பிளாட்பாரத்தில் வசிப்பவர் அருள் (25). இருவரும் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு பிளாட்பாரத்தில் மலர் தூங்கிக் கொண்டு இருந்தபோது, மது போதையில் அங்கு வந்த அருள், மலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். திடீரென எழுந்த அவர் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து அருளை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து வடக்கு கடற்கரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அருளை கைது செய்தனர். இதன்பிறகு காவல்நிலையத்தில் இருந்த அருள், கைவிலங்குடன் தப்பினார். அவரை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று அருள் கைது செய்யப்பட்டார். விசாரணையில், மலரின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் போக்சோ சட்டத்தில் அருள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: