கோவையில் பள்ளி மாணவி பலாத்காரம் வாலிபர் கைது

கோவை: கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த முகமது வாசிக் (29) என்ற வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முகமது வாசிக்கை நேற்று கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை பூங்காவில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 6 வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>