அமைச்சர் காமராஜ் தகவல் துருக்கியில் இருந்து 500 டன் வெங்காயம் இறக்குமதி

திருவாரூர்: துருக்கியில் இருந்து தமிழகத்துக்கு 500 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ேநற்று அளித்த பேட்டி: நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பது வழக்கமானது தான். இந்தாண்டு பெரிய வெங்காயம் விளையக்கூடிய மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழையால் பயிர் அழுகி விளைச்சல் குறைந்ததால் விலையேற்றம் உள்ளது.

இதனால் தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ 40க்கு விற்கப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் தேவையான அளவு தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் 10 நாளில் சின்னவெங்காயம் அறுவடை துவங்கி விடும். அதன்பிறகு சின்ன வெங்காயத்தின் விலை குறையும்.

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 1000 மெட்ரிக் டன் பெரிய வெங்காயம் கேட்டுள்ளோம். முதல்கட்டமாக துருக்கியில் இருந்து 500 டன் வெங்காயம் வருகின்ற 13, 14 தேதிகளில் தமிழகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். வந்தவுடன் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும். தமிழகத்தில் வெங்காயம் பதுக்குவதை தடுக்க மொத்த வியாபாரிகள் 50 டன் அளவிலும், சிறு வியாபாரிகள் 10 டன் அளவிலும் தான் வெங்காயத்தை இருப்பு வைக்க வேண்டும். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: