சூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது

கார்டோம்: சூடான் தலைநகர் கார்டோமில் சீலா செராமிக் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில் கடந்த 3ம் தேதி எல்பிஜி டேங்கர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்தில் இறந்த 14 இந்தியரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.  செராமிக் தொழிற்சாலை தீ விபத்தில் அரி யானா மாநிலத்தை சேர்ந்த 2 பேர், பீகார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த தலா 3 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேர், புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் என, தீ விபத்தில் இறந்த 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இறந்த இந்தியர்களின் உடல்களை சூடானிலிருந்து இந்தியா கொண்டு வரும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட குடும்பங்களுக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டதோடு சடலங்களை பெற்றுகொள்வதற்கான ஒப்புதல் கடிதங்களை அனுப்பும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

>