வாலிபால் போட்டிக்கு இடையிடையே குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை

புதுடெல்லி: வாலிபால் போட்டிக்கு இடையே, இடைவெளியில் ஓடிவந்து தனது பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய நவீன உலகத்தில் அழகு குறைந்துவிடும் என்று சில பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்பால் மறுத்து வரும் நிலையில், கடுமையான சூழ்நிலையிலும், தங்கள் குழந்தைகளுக்கு தாய்பால் புகட்டும் வாழும் தெய்வங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோன்ற ஒருவர்தான் லால்வென்ட் லுயாங்கி. மிசோராம் மாநில துய்கும் வாலிபால் அணியை சேர்ந்த வீராங்கணையான இவர், அணிக்காக கடுமையாக போராடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மிசோரமில் மாநில அளவிலான வாலிபால் தொடர் நடந்து வருகிறது. இதில் அவரது அணியும் பங்கேற்றுள்ளது.

இந்த போட்டி நடந்து கொண்டிருந்த நிலையில், அவர் அடிக்கடி இடைவெளியில் ஓடிவந்து தனது ஏழு மாத கைக்குழந்தைக்கு தாய்பால் புகட்டினார். அவரது தாய்மை குணம் புகைப்படமாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  மிசோரம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா, அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘லால்வென்ட் லுயாங்கிக்கு சல்யூட்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>