மறைமுக தேர்தலை எதிர்த்த திருமாவளவன் வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி மேயர், நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவர்கள் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த நவம்பர் 19ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தது. இதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.

Advertising
Advertising

இதை கேட்ட நீதிபதிகள், தேர்தலில் எங்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யாரும் கோர முடியாது. தன்னை குறிப்பிட்ட பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று கோருவது சட்டப்படியான உரிமைதானேதவிர அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஆகாது. நேர்முக தேர்தலை மறைமுக தேர்தலாக மாற்றியது ஜனநாயக விரோதமானது என்றோ அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றோ கருத முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: