பள்ளிக்கல்விக்கான நிதியை குறைக்கக்கூடாது : மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பாண்டில் 56,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இது தாராளஒதுக்கீடு அல்ல. 2014-15ம் ஆண்டிலிருந்து பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல்தான் கடந்த ஆண்டுக்கான ஒதுக்கீடான 50,113 கோடியிலிருந்து 10 சதவீதம் அதிகரித்துநிர்ணயிக்கப்பட்டது.

இதை குறைக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு நிதியமைச்சகம் அழுத்தம் கொடுத்து சாதிக்க நினைப்பது கல்வித்துறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.மத்திய அரசு ஒதுக்கிய தொகையிலும் 3,000 கோடியை குறைப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும். கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி செலவு அல்ல. முதலீடு என்பதை மத்திய நிதி அமைச்சகம் உணர வேண்டும். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக பள்ளிக்கல்வியில் கை வைக்கக்கூடாது.

Related Stories: