குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் இலங்கை தமிழர், இஸ்லாமியர்களுக்கு இடமளிக்க வேண்டும்; டிடிவி அறிக்கை

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தை மதத்தின் அடிப்படையில் அணுகாமல், மனிதநேயத்தின் அடிப்படையில் மத்திய அரசு கையாளவேண்டும் என வலியுறுத்துகிறேன். பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கை தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இதில் விடுபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த சட்டத்திருத்தம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டால் மட்டுமே இந்தியா மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் போற்றுகிற தேசம் என்பது உறுதியாகும். எனவே, மத்திய அரசு இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: