கிலோ 25க்கு விற்ற வெங்காயம் போட்டி போட்டு வாங்கிய மக்கள் : கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் காலியானது

கடலூர்:  வெங்காய விலை கிலோ 200  வரை விற்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து மார்க்கெட்டுகளில் விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவில் கிலோ 25க்கு விற்கப்படும் மட்டரக வெங்காயம் (சிறிய ரகம்) ஒரு டன் (1000 கிலோ) அளவுக்கு நேற்று கடலூர் மார்க்கெட்டுக்கு வந்தது. இந்த வெங்காயம் 4 கிலோ 100 (கிலோ 25) என்ற அளவில் விற்கப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.  இதுபற்றி கடலூர் மார்க்கெட் வியாபாரி பக்கிரான் கூறும் போது, பெங்களூருவில் விலை குறைவாக விற்கப்படும் மட்டரக வெங்காயம் (சின்ன ரகம்) கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு டன் மட்டுமே வந்ததால் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தது என்றார்.

Related Stories: