சுவர் இடிந்து 17 பேர் பலி ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த நடூரில் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் ஜவுளிக்கடை உரிைமயாளர் சிவசுப்பிரமணியத்தை செய்து கைது கோவை சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அவரது வக்கீல் வாதாடுகையில், சிவசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமாக உள்ளது.

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். அரசு தரப்பு வக்கீல் வாதாடுகையில், போதிய அஸ்திவாரம் இல்லாமல் 20 அடி வரை சுவர் எழுப்பியதால் இச்சம்பவம் நடந்துள்ளது, உடல்நலமில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம். ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: