அமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது

ஓஸ்லோ: அண்டை நாடான எரித்திரியா உடனான பிரச்னைக்கு தீர்வு காண, எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது மேற்கொண்ட அமைதி நடவடிக்கைகளை பாராட்டி, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று ஓஸ்லோ நகரில் நடந்த நோபல் பரிசளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட தியாகம் செய்த எத்தியோப்பியர்கள், எரித்திரியாவினரின் சார்பில் இந்த நோபல் பரிசை பெற்று கொள்கிறேன். அதே போல, கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண நல்லெண்ணம், நம்பிக்கை, அர்ப்பணிப்புடன் முக்கிய பங்காற்றிய எரித்திரியா நாட்டின் அதிபர் இசயாஸ் அவெர்கி சார்பிலும் இதனை ஏற்றுக் கொள்கிறேன்,’’ என்று கூறினார்.


Tags : Abhi Mohammed , Abhi Mohammed won ,Nobel Peace Prize
× RELATED இந்திய பேராசிரியர், மனைவிக்கு...