காலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு

புதுடெல்லி: தற்போது எல்லாம் சாதாரணமாக திருமணம் என்றாலே பெரும் அளவில் பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. திருமண மண்டபம் அலங்காரம், மியூசிக் பார்ட்டி, சாப்பாடு என்று ஒவ்வொன்றுக்கும் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில், ரு.50 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி   ஏதாவது காரணத்தால் பாதிக்கப்பட்டால், பெரும் அளவில் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுக்கிறது. எனவே பெரும் பொருட் செலவில் செய்யப்படும் திருமணங்களுக்கு காப்பீடு செய்வது என்பது தற்போது முன்னுரிமை விஷயமாக உள்ளது.  இதுகுறித்து பியூச்சர் ஜெனரல் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ் தேஷ்பாண்டே கூறியதாவது:  பெரும் பொருட் செலவில் நடத்தப்படும் திருமணங்களுக்கு காப்பீடு செய்வது தற்போது அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு இதுவரையில் 70 காப்பீடு பாலிசிகளை வழங்கியுள்ளோம்.
Advertising
Advertising

காப்பீடு செய்வது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் திருமணம் செய்யும் குடும்பத்தினரே நேரில் வந்து காப்பீடு பாலிசி எடுத்துக் கொள்வது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது   பொதுவாக, நிகழ்ச்சிகள் ரத்து மற்றும் ஒத்திவைப்பு போன்ற காரணங்கள் பெரும் பிரச்னையாக மாறியுள்ளன. ஏனெனில், முன்பதிவு செய்த திருமண மண்டபங்கள் / அகங்குக்கான கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது. அதேபோல், கேட்டரிங் பொறுப்பை ஏற்ற நிறுவனங்கள், நிகழ்ச்சி ரத்து என்றால், பேசிய கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கின்றன. சில நிறுவனங்கள் 50 முதல் 70 சதவீதம் கட்டணம் வசூலிக்கின்றன. ஏற்கனவே நிதி நெருக்கடியில் பெரும் பணத்தை செலவு செய்துள்ள குடும்பங்கள் இந்த இழப்பீடை சமாளிக்க முடியாமல் கவலையில் மூழ்கிவிடுகின்றன.

திருமண நிகழ்ச்சிகளின்போது, நடக்கும் திருட்டு மற்றும் விபத்துகளுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. திருமணம் செய்யும் குடும்பத்தினர் மதிப்பீடு தொகையில் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரையில் அல்லது ரூ.50 லட்சம் மதிப்பீடு செலவுக்கு ரூ.50 ஆயிரம் பிரிமியம் செலுத்தவும் மகிழ்ச்சியுடன் முன்வருகின்றனர். ரூ.50 லட்சம், ரூ.60 லட்சம் மதிப்பீடுக்கான இன்சூரன்ஸ் பிரிமியம் தலா 0.25 சதவீதம் மற்றும் 0.30 சதவீதம் தான்.   இவ்வாறு தேஷ்பாண்டே கூறினார்.

Related Stories: