சில்லி பாயின்ட்...

*  தும்பாவில் நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் கேரளா 9 விக்கெட் இழப்புக்கு 525 ரன் குவித்தது. கேப்டன் சச்சின் பேபி 155 ரன் விளாசினார்.

* 2022ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்று பாக். கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

* ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி (பகல்/இரவு), பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 10.30க்கு தொடங்குகிறது.

* கர்நாடக அணியுடன் திண்டுக்கல்லில் நடக்கும் ரஞ்சி கோப்பை போட்டியில், நடுவருடன் வாக்குவாதம் செய்த தமிழக வீரர் முரளி விஜய்க்கு போட்டிக்கான ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது

Related Stories:

>