×

அண்ணாநகரில் சென்டர்மீடியனில் கார் மோதி நொறுங்கியது அடுத்தடுத்து 2 பைக் மோதியதால் பரபரப்பு : மருத்துவ மாணவர் உள்பட 4 பேர் காயம்

அண்ணாநகர்: அண்ணாநகரில் சென்டர்மீடியனில் கார் மோதி நொறுங்கியது. இந்த கார் மீது அடுத்தடுத்து வந்த 2 பைக்குகளும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவ மாணவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ரோஷன் (24). இவர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு மருத்துவ கல்வி பயின்று வருகிறார். நேற்றிரவு 10 மணியளவில் மருத்துவமனையில் பயிற்சி பணியை முடித்து விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அண்ணா நகர் சாந்தி காலனி அருகே வந்தபோது, சென்டர் மீடியனில் பயங்கரமாக கார் மோதியது.

பின்னால் வந்த பைக், கார் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபுஆனந்த் (33), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ரவி (29) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களது பின்னால் வந்த திருமங்கலத்தை சேர்ந்த வாசுதேவன் (45) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்து, ரோஷனிடம் விசாரித்து வருகின்றனர்.



Tags : student ,median ,bike crashes ,Anna Nagar , car crashed , central ,median , Anna Nagar, injured, medical ,student
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...