×

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் 3 முறை ஏலம்: அரசுக்கு ரூ.15.13 கோடி வருவாய்...மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பரிசு பொருட்களை ஏலம் விட்டதில், அரசிற்கு 15.13 கோடி ரூபாய் கிடைத்ததுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பல நாடுகளுக்கு  செல்லும் போது அவருக்கு பல நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்தியாவிற்கு வரும் சில வெளிநாட்டு தலைவர்களும், பிரமுகர்களும் பிரதமருக்கு பல நினைவுப் பரிசுகளை வழங்குகியுள்ளனர்.

இந்த பரிசுப் பொருட்கள் மத்திய அரசால் ஏலம் விடப்பட்டு, அதன் மூலமாக கிடைக்கும் வருவாய் நாட்டின் சில முக்கிய திட்டங்களுக்கு செலவிட பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அதனால் அவ்வப்போது, பிரதமர் மோடிக்கு  கிடைத்த பரிசுப் பொருட்கள் ஏலத்தில் விடப்படும். இந்த பொருட்களை வாங்க பலரும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல், பிரதமர் மோடிக்கு 2014 முதல் இதுவரை கிடைத்த  அன்பளிப்புகள் 3 முறை ஏலம் விடப்பட்டுள்ளன என்றும் இதன் மூலம் 15 கோடியே 13 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. இந்த தொகை முழுவதும் கங்கை நதியை தூய்மை செய்யும் திட்டத்திற்கு நிதியாக  வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Tags : auction ,government ,Modi , Prime Minister Modi, Gifts, Government, Revenue, Rajya Sabha, Union Minister
× RELATED கடந்த வாரத்தை விட 2 உயர்வு நிலக்கடலை...