கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக நித்தியானாந்தா தகவல்...?

ஈக்குவடார்: கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக நித்தியானாந்தா அடுத்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானாந்தா, முகநூல் மூலம் அவரின் சீடர்களிடம் பேசிய அவர் கைலாச நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.

தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என நித்தியானாந்தா பெயர் வைத்து இருந்தார். மேலும் அந்த தீவை தனி நாடாக அறிவிக்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து ஐநா அமைப்பிடமும் அந்த தீவை தனி நாடக அறிவிக்க வேண்டும் என்று நித்தியானாந்தா கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஈக்குவடார் அரசு நிராகரித்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முகநூல் வீடியோ மூலம் பல அதிர்ச்சி தகவலை அளித்து வந்த நித்தியானாந்தா தற்போது

அவரின் சீடர்களிடம் கைலாச நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாகவும், தனக்கு பல நாடுகளிலிருந்து அழைப்பு வருவதால், விரைவில் ஒரு நாட்டில் ஸ்ரீகைலாசா தேசத்தை அமைப்போம் எனவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை 12 லட்சம் பேர் தன் நாட்டிற்கு விண்ணப்பித்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>