×

மெரினா கடற்கரையில் தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்கம்படி தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் மெரினா அணுகு சாலையிலிருந்து, கடற்கரை மணற்பரப்பை கடந்து அலைகள் அருகே செல்வதை சாத்தியமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சாய்தள பாதை அமைத்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தங்களது சக்கர நாற்காலியில் சாய்தளம் வழியாக கடலலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் அந்த சாய்தளம் இரண்டு நாட்களில் சென்னை மாநகராட்சி அகற்றிவிடுகிறது.

இந்நிலையில் இந்த சாய்தள பாதையை அகற்றாமல் நிரந்தர பாதையாக மாற்றக்கோரி வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் கேசவன் என்பவர் தமிழக தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், சமூகநலத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கடந்த 4ம் தேதி மனு அனுப்பியுள்ளார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து, மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Tags : IOC ,government ,Tamil Nadu ,Marina beach , Marina beach, dirt road, Tamil Nadu government, answer, iCort order
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...