×

பண்ருட்டி, தருமபுரி, ராமநாதபுரத்தை தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்...இது ஜனநாயகத்துக்கு ஆபத்து என சமூக ஆர்வலர்கள் கருத்து

திருச்சி: தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தொடர்ந்து பல மாவட்டங்களில் ஏலம் விடப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பண்ருட்டி, தருமபுரி, ராமநாதபுரத்தை தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் வார்டு உறுப்பினர் பதவி ஏலம் விடப்பட்ட வீடியோ வெளியாகி பொதுமக்கள் இடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசலூர் கிராமத்தில் வார்டு உறுப்பினர் பதவி  .2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் திருச்சி மாவட்டம் அரசலூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 27 மாவட்டங்களில்  மட்டும் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 27-ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும்,  2-வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடிமட்டம் வரை ஜனநாயகம் தழைத்தோங்கவே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.  ஆனால் இதனை குழி தோண்டி புதைக்கும் வகையில் பணபலம் கொண்டவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி  பதவிகளை விலை கொடுத்து வாங்கும் போக்கு தொடர்ந்து நடக்கிறது. ஊராட்சி ஒன்றியத்திலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலும் போட்டியிட நேற்று ஒருசிலர் மட்டும் மனுக்களை பெற்றுச்சென்றனர். இது போன்ற செயல்கள் பெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : district ,Ramanathapuram ,Darumapuri ,activists ,Trichy ,Panruti ,Panchayat leader ,Panrutti , Social activists , panchayat , panchayat ,Trichy ,Panrutti, Darumapuri ,Ramanathapuram
× RELATED தொடர் மழையின்றி எள் விவசாயம் பாதிப்பு