×

சென்னையில் இயங்கும் மாநகராட்சி பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி: முதற்கட்டமாக 50 பேருந்துகளில் அறிமுகம்

சென்னை: சென்னையில் மாநகராட்சி பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் கிட்டத்தட்ட 3,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பழைய பேருந்துகளாக இருந்தவை தற்போது புதியதாக மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. தற்போது 60% பேருந்துகள் புதிய பேருந்துக்காக இயக்கப்படுகின்றன. இதில் அடுத்தகட்டமாக பேருந்துகளில் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, இறங்கும் இடம் வருவதற்கு முன்பு 100 மீட்டர் முன்பாகவே அறிவிக்கும் வகையில் ஜிபிஎஸ் கருவியை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது முதற்கட்டமாக 50 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 21G அதாவது பூந்தமல்லியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் பேருந்து, அதேபோல் பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை இயக்கப்படும் 101 என்ற பேருந்தும், சென்னை பாரிமுனையில் இருந்து கேளம்பாக்கம் வரை இயக்கப்படும் 570 இந்து 3 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடம் கொண்ட 50 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் படி பயணிகள் தாங்கள் இறங்குவதற்கு முன்பாக 100 மீட்டருக்கு முன்னதாக பேருந்தின் உள்ள பொருத்தப்பட்டுள்ள 6 ஒலிபெருக்கியின் மூலமாக அறிவிப்பு அளிக்கப்படுகிறது. இதன்முலம் நடத்துனரின் வேலை மிகவும் எளிதாக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக பல திட்டங்கள்:

தொடர்ச்சியாக ஒவ்வொரு பேருந்துகளிலும் திரை அமைத்து பேருந்து எப்போது வரும் என்பதை முன்கூட்டியே அறியும் வகையில் உள்ள தொழிநுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதேபோல் பேருந்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மீதம் உள்ள 3,000 பேருந்துகளில் இந்த வசதி விரைவில் கொண்டுவரப்படும் என சென்னை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Tags : Chennai ,Introduction ,time ,GPS facility , Chennai, Corporation Bus, GPS Facility, Introduction
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...