சிறப்பு தகுதி அளித்த 370 வது பிரிவு ரத்து செய்யப்படப்பின் காஷ்மீர் அமைதியாக உள்ளது: மக்களவையில் அமித்ஷா பேச்சு

டெல்லி : சிறப்பு தகுதி அளித்த 370 வது பிரிவு ரத்து செய்யப்படப்பின் காஷ்மீர் அமைதியாக உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து, அம்மாநிலத்தை ஜம்முகாஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய பாஜ அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி பாராளுமன்றத்தில் அறிவித்தது. போராட்டம் வெடித்துவிடக் கூடாது என்பதற்காக, தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தூதரக உறவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

இதனால் இருநாடுகளிடையே நல்லுறவு சீர்கேடு அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் கூடி விவாதம் நடைபெற்றது. எனினும் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச அமைப்புகளில் பிரச்னையை எழுப்பி, தோல்வி கண்டது. இந்நிலையில் காஷ்மீரில் படிப்படியாகக் காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதம் இன்று மக்களவையில் நடந்தது.

அப்போது இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு உள்ளதாக அமைச்சர் அமித்ஷா பதிலளித்து பேசினார். அப்போது; சிறப்பு தகுதி அளித்த 370 வது பிரிவு ரத்து செய்யப்படப்பின் காஷ்மீர் அமைதியாக உள்ளது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டப்பின் காஷ்மீரில் ரத்தக்களறி ஏற்படும் என்று காங்கிரஸார் எதிர்பார்த்தனர்; ஆனால் காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்தது போல் காஷ்மீரில் ஏதும் நடக்கவில்லை எனவும் கூறினார். மேலும் பேசிய அவர்; காஷ்மீரில் சாதாரண சூழல் தான் நிலவுகிறது. குறிப்பிட்டு சொல்லும்படியான வன்முறை ஏதும் இல்லை. இது வரை ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்படவில்லை. முழு அமைதி நிலவுகிறது என கூறியுள்ளார்.

Related Stories: